கடந்த சில வருடங்களாக ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன், இருவரும் ஒரே வீட்டில் தங்கி டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்தனர்.

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக, உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சுற்றி வரும் ஸ்ருதிஹாசனுக்கு தற்போது தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்து வெளியான சலார் பார்ட் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கி டேட்டிங்கில் இருப்பதாக கூறி வந்த நிலையில், அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர்.

மேலும் அவ்வப்போது ரசிகர்களிடம் பேசி வரும் ஸ்ருதிஹாசன் அவர்களின் கேள்விகளுக்கு போல்டாக பதில் அளித்து ஆச்சரியப்பட வைத்தார்.

இதனிடையே சமீப காலமாக ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்.

இதன் காரணமாக ஸ்ருதியும் சாந்தனுவும் ஒரு மாதமாக பிரிந்து வாழ்வதாக சில வதந்திகள் பரவத்தொடங்கியது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைதள பக்கத்திற்கு திரும்பிய ஸ்ருதிஹாசன், “இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். இதில் என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக ஆக்டீவாக இருந்தாலும்,அவரது பதிவுகளில் சாந்தனுவுடன் அவரது புகைப்படங்கள் ஒன்றுகூட பதிவிடவில்லை.

மேலும் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஓரி (ஓர்ஹான் அவத்ரமணி) ரெடிட்டில் சாந்தனுவை ஸ்ருதியின் கணவர் என்று குறிப்பிட்டார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.

ஆனால் இந்த தகவலை மறுத்த ஸ்ருதிஹாசன்,’’எனக்கு திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகக் கூறும் நான், இதை நான் ஏன் மறைக்க வேண்டும்? என்னை பற்றி அறியாதவர்கள், தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Share.
Leave A Reply