இன்று மாலை புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக மாத்தளை இரத்தோட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு துணுக்காய் அய்யன்குளம் பகுதியைச் சேர்நத 49 வயதுடைய நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.