இருவரும் காதலர்கள், திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில்தான். இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. தாதியர் படிப்பை முடித்துள்ளார். 24 வயதாகிறது. சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரு வருடமாக தாதியாக வேலை பார்த்து வருகிறார்.
வினிஷா, செல்வமணி என்பவரை காதலித்து வந்தார். செல்வமணி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர். 29 வயதாகிறது.. இப்போது சென்னையில்தான் இவரும் வேலை பார்த்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷாவும், மதுரையை சேர்ந்த செல்வமணியும் சென்னையிலேயே வேலை பார்ப்பதால், 2 பேருமே கல்யாணம் செய்யாமலேயே நெருக்கமாகிவிட்டார்கள்.
இதன் விளைவு வினிஷா கர்ப்பமானார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.7 மாதம் என்பதால், தன்னந்தனியே தடுமாறி வந்துள்ளார். இந்நிலையில், வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி வந்திருக்கிறது.
தான் ஒரு தாதி என்பதால், தனக்குத்தானே சுயபிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதற்காக மலசலக்கூடத்துக்குள் (பாத்ரூமுக்குள்) நுழைந்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரால் முடியவில்லை.
எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் அவரால், பிரசவம் எளிதாக செய்து கொள்ள முடியவில்லை.. நேரம் ஆக ஆக, பிரசவ வலியும் அதிகரித்தது. அந்த வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியாமல், பிரசவமும் எளிதில் முடியாமல், கடும் அவஸ்தைக்கு ஆளானார்.
சிசுவின் கால் தட்டுப்பட்டுவிட்டால், ஒரேயடியாக வெளியே இழுத்துவிடலாம், அதற்கு பிறகு வலி குறைந்துவிடும் என்று நினைத்தார். இதற்காக கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்.
எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் அவரால், பிரசவம் எளிதாக செய்து கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக, பிரசவ வலியும் அதிகரித்தது. அந்த வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியாமல், பிரசவமும் எளிதில் முடியாமல், கடும் அவஸ்தைக்கு ஆளானார்.
வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. தனித்தனியாக கால்கள் பிய்ந்துக்கொண்டு வந்தது.
அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது. இதற்கு பிறகு, குழந்தையின் கால்களை அதே பாத்ரூமில் வீசிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஓடினார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால், அதற்குள் வினிஷாவின் உடல்நிலையும் மோசமாகிவிட்டதால், அங்கேயே அவருக்கு தீவிர சிகிச்சையும் ஆரம்பமானது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், மாம்பலம் பொலிஸூக்கு தகவல் தந்தது. பொலிஸாரும் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினிஷாவுக்கு இன்னும் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறதாம்.