இலங்கை தமிழரசுக் கட்சியினர் வட மாகாணத்தில் ஏற்பாடு செய்திருந்த மே தின கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.

கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலய முன்றலில் பேரணியாக சென்றவர்கள், A9 வீதி வழியாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை சென்றடைந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் S.சிறிதரன் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.

‘விழிப்படைவார் தொழிலாளர் விடியும் தேசம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி சீ.மூ.இராசமாணிக்கம் இல்லத்திற்கு முன்பாக ஆரம்பமான வாகனப் பேரணி கோட்டைக்கல்லாறு வரை சென்று பெரிய கல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் மே தினக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Share.
Leave A Reply