“பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.

இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது.

அப்போது வாகனங்கள் அனைத்தும் சாலையையொட்டி நிற்கும் நிலையில் சக்கர நாற்காலியில் முதியோரை தள்ளிக் கொண்டு செல்லும் சிறுமி ஒவ்வொரு 3 அடிகளிலும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் கார் டிரைவர்கள் முன்பு பணிந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.

சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் சிறுமியின் செயலை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply