ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை ஜனாதிபதி புடின் இன்று தொடங்கியுள்ளார்.. ரஷ்யாவில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக அவர் ரஷ்ய ஜனாதிபதியாகி உள்ளார். இதன் மூலம் ரஷ்ய வரலாற்றில் அதிகம் முறை ஜனாதிபதியாக இருந்தவர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
1999ம் ஆண்டில் ல் செயல் அதிபராக பதவியேற்ற புடின், 2000ம் ஆண்டு மே 7ம் திகதி முதல் முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். 2008 வரை பதவியில் இருந்த அவர் பிறகு 2012 மே மாதம் முதல் இன்று வரை ஒற்றை ஜனாதிபதியாக நீடிக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதியாக கால் நூற்றாண்டை நிறைவு செய்ய உள்ள புடின், 25 ஆண்டு கால பதவியில் அரசியல் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக நசுக்கி உள்ளார். சுதந்திரமான சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றினார். சர்வதேச எதிர்ப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் மீறி 3 ஆண்டாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளார். தற்போது 71 வயதாகும் புடின் தனது அடுத்த 6 ஆண்டு பதவிக்காலத்தில் என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது.