போரை நிறுத்ததை கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பாலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இரத்து செய்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், தனது நட்பு நடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படவிருப்பது தொடர்பில் அமெரிக்கா எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் இதனை அமெரிக்கா தடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு, பாலஸ்தீனம் உடனான போரில் அதிகமான சட்டவிதி மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு போருக்கே அவசியம் இல்லை என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 34,000இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதில், பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தொடரும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே இதனை சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஆயினும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தென்ஆப்பிரிக்கா விடுத்த கோரிக்கை குறித்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது தரப்பு நியாயத்தை ஏற்க மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகுறது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா. பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். எனவே, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கின.
இதுநாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால், இஸ்ரேல் அதனை நிராகரித்து வந்தது. இதுவரை போரில் 34 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காஸாவுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் தராததால், குடிநீர் பஞ்சம், உணவு பஞ்சம் என்று அனைத்தும் தலைதூக்கி நிற்கின்றன. இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வருகின்றன.
இந்த மாணவர்கள் போராட்டம் லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரங்களில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
போர் குற்றம், தீவிரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களை விசாரித்து வரும் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1990களில் உருவானது. இதில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே, அந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் பொருந்தும்.
சில ஆண்டுக்கு முன்னர், இந்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து, உடனே அமெரிக்கா அந்த நீதிமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியது.
அதேபோல், அந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் யாரும் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்றும் கூறியது. இதனையடுத்து, இஸ்ரேல் பிரதமர் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முடிவை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பாலஸ்தீன போரே தேவையற்றது என்று பல நாடுகள் கூறிவரும் நிலையில், தற்போது ஏராளமான விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இதனால், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறினாலும் அமெரிக்கா அதனை தடுக்கும் என்பதே உண்மையாகும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா