முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு 77 வயாகிறது. 45 வயதான ஆபாச பட நடிகையின் வாக்குமூலம், அமெரிக்க அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
அமெரிக்க அதிபர்கள் மீது பாலியல் புகார்கள் கிளம்புவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.. இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் டொனால்ட் டிரம்ப்.
டிரம்ப்: 3-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர் மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.. ஆரம்ப காலத்தில் டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார்..
இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10க்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தனர்.
அதாவது, கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர்..
இதற்கு பிறகுதான், இன்னொரு ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் பொதுவெளியில் பகீரை கிளப்பியிருந்தார்.
நடிகை: தான் வெளியிட்ட ‘புல் டிஸ்குளோசர்’ என்ற புத்தகத்தில், அப்போதைய அதிபராக பதவி வகித்த டிரம்ப்புடனான உறவு குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்..
அதாவது கடந்த 2006ல் டிரம்ப் மனைவி மெலினா குழந்தை பிறப்புக்காக சென்றிருந்தபோது, டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, மிகவும் கேவலமாக நடந்து கொண்டதாக அப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்..
இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, அதிபர் தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்ததால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.
. எதிர்பார்த்தது போலவே, டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவும் தேர்தலில் ஏற்பட்டது..
டாலர்கள்: இதற்கு பிறகு, இந்த விவகாரம் தலைதூக்காமல் இருக்கவும், இதுகுறித்து பேசாமல் இருக்கவும் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் நடிகைக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த பணம், பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது இன்னொரு வழக்கு பாய்ந்து, பரபரப்பை கிளப்பியது.
வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டில் டிரம்ப் சிக்கினார்.
எப்போதுமே லைம்லைட்டில் இருக்க விரும்பும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் சீனில் வந்துள்ளார்..
மறுபடியும் அதிபர் தேர்தலில் நிற்க போகிறாராம்.
வெட்ட வெளிச்சம்: டிரம்ப் பணம் கொடுத்த விஷயம் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.. வெளிவந்துவிட்டது.
டிரம்ப் மீதான குற்றவியல் வழக்கில் நியூயார்க் கோர்ட்டில் ஸ்டோர்மி டேனியல்ஸிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டது…
அப்போது கோர்ட்டில் ஆஜரான ஸ்டோர்மி டேனியல்ஸ் சொன்னதாவது: “கடந்த 2006ம் ஆண்டில் லேக் தஹோவில், ஒரு பிரபல கோல்ஃப் போட்டியில் டிரம்ப்பை சந்தித்தேன்.
அப்போது எனக்கு 27 வயது. ஆனால், ட்ரம்ப் என்னுடைய அப்பாவை விட வயது மூத்தவர்.
குற்றச்சாட்டு: இரவு உணவு சாப்பிட டிரம்ப் என்னை அழைத்தார். நான் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன்.. பிறகு என்னுடைய சம்மதத்துடன் தான் அவர் என்னை அணுகினார்…
அப்போது டிரம்ப் என்னை செல்லப் பெயரிட்டு அழைத்தார்.. ஆடைகளை களைந்தார்” என்று டிரம்ப்பின் ஒவ்வொரு பாலியல் லீலைகளையும், ஸ்டோர்மி டேனியல்ஸ், கோர்ட்டில் மிகவும் வெளிப்படையாகவே சொன்னாராம்..
டிரம்பின் ஹோட்டல் அறையில் என்ன காணப்பட்டது-டைல்கள் என்ன நிறத்தில் காணப்பட்டன எவ்வாறான மேசை காணப்பட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.
இரவு உணவின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டன ஆபாசப்பட திரைப்படத்துறை பற்றி டிரம்ப் கேள்வி எழுப்பினார் பாலியல்உறவு பற்றி அவர் அவ்வேளை பேசவில்லை இது என்னை கவர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் கழிவறைக்கு சென்றேன் வெளியே வந்து பார்த்தவேளை ஹோட்டல் கட்டிலில் பொக்சர் டீசேர்ட்டுன் காணப்பட்டார் நான் அச்சத்தினால் அதிர்ந்துபோனேன் அங்கு வேறு எவரும் அரைகுறை ஆடையுடன் இருப்பார்கள் என நான் நினைத்துகூடபார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது மனைவி மெலனியாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனெனில் அவர்கள் “ஒரே அறையில் தூங்கவில்லை” என்று அவர் தன்னிடம் கூறியதாக சாட்சியம் அளித்தார்.
இதையெல்லாம் கேட்டு, இந்த வழக்கை விசாரித்து கொண்டிருந்த தலைமை நீதிபதி ஜுவான் மெர்ச்சனை மிகவும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிட்டாராம்.
ஏற்கனவே தன்மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதுடன், அப்படி ஒரு சம்பவமே ஆபாசபட நடிகையுடன் நடக்கவில்லை என்று ஆணித்தரமாக சொல்லி வருகிறார்..
அத்துடன் வரப்போகும் தேர்தலில் போட்டியிட மும்முரமாகியும் வருகிறாராம்.
அமெரிக்க அரசியல்: இப்படிப்பட்ட சூழலில், கோர்ட்டில் டிரம்ப்பை பற்றி புட்டுபுட்டு வைத்த ஆபாச நடிகை, டிரம்ப்புக்கு மிச்சம் மீதியிருந்த மானத்தையும் கோர்ட்டிலேயே வாங்கியிருக்கிறார்.. இதனால், மறுபடியும் அமெரிக்க அரசியலில் “காமப்புயல்” வீசத்துவங்கியிருக்கிறது.
தொடர்புடைய ஆங்கில செய்தி
Stormy Daniels gives graphic account of encounter with Donald Trump at criminal trial