பிரேசில் நாட்டில் வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் தொடர்பிலான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
அண்மையில் பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
குறித்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகிய நிலையில் பலர் வீடுகளை இழந்தும், உறவினர்களை பிரிந்தும் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பேரிடரின்போது பிரிந்துபோன தன் வளர்ப்பு நாய்களுடன் அதன் உரிமையாளர் மீண்டும் இணைவது குறித்தான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
மேலும் வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் பெருமகிழ்ச்சியில் அவர் தன் நாய்களை அணைத்தவாறு கதறி அழுதார். இந்த பதிவு காண்போரை நெகிழ வைத்து வேகமாக பகிரவும் செய்துள்ளது.
Rescued man reunited with his dogs in the flood-hit Brazilian state of Rio Grande do Sul.. 🥺
🎥 IG: mkparnow pic.twitter.com/8CtscC4VKr
— Buitengebieden (@buitengebieden) May 9, 2024