கர்நாடகா மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினரின் செயல் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலுள்ள புத்தூர் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், எதனால் இப்படி தங்கள் குடும்பத்துக்கு தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது என பெரியவர்களிடம் கேட்டுள்ளனர்.
உயிரிழந்த அந்த பெண்ணின் ஆவி அமைதியடையாமல் சுற்றித் திரிவதே இந்த தொடர் பிரச்னைகளுக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, தங்கள் மகள் கன்னியாகவே உயிரிழந்ததால் தான் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என அந்த குடும்பத்தினர் முடிவு செய்து, தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
இதையும் படியுங்கள் : அல்ஜீரியாவில் காணாமல் போன நபர்! 26 ஆண்டுக்கு பின் வீட்டின் அருகிலேயே கண்டுபிடிப்பு!
இதையடுத்து, அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகளுக்கு மணமகன் தேவை என செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளது.
அந்த செய்தித்தாள் விளம்பரத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை. மணமகன், 30 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஆணாக இருக்க வேண்டும். விருப்பமுடையோர் கீழ்க்கண்ட எண்ணை அழைக்கவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, செய்தித்தாள்களில் வெளிவந்த விளம்பரம் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.