“சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

அந்த வகையில், 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

எத்தியோப்பியாவில் வசிக்கும் பன்னா என்ற பழங்குடியின மக்கள் இந்த சவாலான திறமையை தங்கள் அன்றாட வாழ்க்கையில் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பழக்கமானது வரலாற்று ரீதியாக ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபெற்று வருகிறது. நச்சு பாம்புகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள பன்னா பழங்குடியினரால் எடுக்கப்பட்ட ‘முன்னெச்சரிக்கை’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

வெறும் நடைபயணத்துக்கு அப்பால், பன்னா மக்கள் ஸ்டில்ட் நடை பயணத்தை ஒரு கலை வடிவமாகவே உயர்த்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply