•  “பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி.

• விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை. “,

“பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், மனைவி மதிவதனி, பிள்ளைகள் மரணமடைந்து விட்டதாக பிரபாகரனின் அண்ணன் மனோகரன் கூறியிருந்தார்.

மேலும், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது.

பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ந்தேதி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, டென்மார்க்கில் இன்று முதல் முறையாக பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் முன்னெடுப்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்ல்ஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகளும், ஆதரவு அமைப்புகளும் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வழக்கம் இல்லை.

காசி ஆனந்தன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.”,

Share.
Leave A Reply