இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகளில் ஈடுபடுவதுடன் திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
தமிழ் இனப்படுகொலை தினம் என குறிப்பிடப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தை இன்றைய தினம் குறிக்கின்றது என பட்ரிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலையில் பலியானவர்கள் உயிர்பிழைத்தவர்களை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நினைவுகூரும் இந்த தருணத்தில் நான் எனது ஆதரவை அவர்களிற்கு வெளியிடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றங்களிற்கும் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களிற்கும் கண்மூடித்தனமான தடுத்துவைத்தல் சித்திரவதைகள் நீதி பொறுப்புக்கூரலை உறுதி செய்வதற்கான எந்த நேர்மையான நடவடிக்கைகளையும் இன்றுவரை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவி;ல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விட மோசமான விடயம் என்னவென்றால் இடம்பெற்ற இனப்படுகொலையை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம் சர்வதேச தலையீடுகள் திட்டமிட்டு பிழையான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.