49 கிலோ நிறையுடைய நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா (ஹென்டா) மீன் சிக்கியுள்ளது.
காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்குச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் இந்த நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன் சிக்கியுள்ளது.
பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளதுடன் 49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.
கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.