ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரின் மலைப்பகுதியில் இருந்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஈரானின் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தெரிவு செய்ய வேண்டும்.

அதன்படி எதிர்வரும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply