சனிக்கிழமை காலை நுசெய்ரெட்டின் சந்தை மும்முரமாக காணப்பட்டது.அங்கு காணப்பட்டவர்களில் ஆசியா அல் நெமெரும் ஒருவர்.தனது சகோதரிக்கு தேவையான மருந்துகள் எஞ்சியிருக்ககூடிய மருந்தகத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

அன்சாம் ஹரோன் எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக மகளிற்கு புத்தாடையை வேண்டும்  எதிர்பார்ப்புடன் அங்கு காணப்ட்டார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய படையினர் தரைவழியாக உள்ளே வந்தவேளை காசாவின் இந்த பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அவ்வேளை ஹரோனின் வீடு விமானக்தாக்குதலால் அழிக்கப்பட்டது.

எனினும் ரபாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்கள் மீண்டும் இந்த பகுதிக்கு வந்துசேர்ந்தனர்.

நுசெய்ரட் சந்தை எப்போதும் சனக்கூட்டம் நிரம்பியது இப்போது இந்த பகுதிக்கு அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் அது மேலும் நெரிசலாக காணப்பட்டது என்கின்றார் 29 வயதான ஹரோன்.அவர் தனது உறவினருடன் தங்கியிருக்கின்றார்.

அவர் தனது பிள்ளைகளிற்கா ஆடைகளை தெரிவுசெய்வதில் ஈடுபட்டிருந்தவேளையே இஸ்ரேலின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது,அவர் ஒருநொடி கூட சிந்திக்காமல் வெளியில் ஓடி பிள்ளைகள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்.

வெளியே தீர்ப்பு நாளின் பயங்கரம் போல ஒரு காட்சியை கண்டேன் என்கின்றார் அவர்,பதற்றமடைந்த மக்கள் அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு முயன்றுக்கொண்டிருந்தனர்.

சிறிதுநேரத்தில் ஹெலிக்கொப்டர்களும் ஆளில்லா விமானங்களும் தாக்குதலில் இணைந்துகொண்டன,இந்த தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்,அவர்களுடைய சிதைந்த உடல்கள் வீதி எங்கும் சிதறிக்கிடப்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அனைவரும் அச்சத்துடன் காணப்பட்டனர் அலறினார்கள் என தெரிவிக்கும் அவர் நான் நின்றிருந்த வீதி 50 மீற்றர் நீளமானது ,ஆனால் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்தார்.

எனக்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் அச்சம் காரணமாக மயங்கிவிழுந்தார்,வீதியோரங்களில் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தவர்கள் அவற்றை கைவிட்டுவிட்டு ஒடினார்கள்”

அங்கிருந்து தப்பியோட முயன்றவர்களில் காசாவின் வடக்கினை சேர்ந்த பொறியியலாளரான எல்நெமெரும் 37 ஒருவர்.

நான் ஏனைய பெண்களுடன் வீதியில் நடந்துகொண்டிருந்தேன்,நாங்கள் கடும் அச்சத்தின் பிடியில் சிக்கினோம் என அவர் தெரிவித்தார்.அவர்கள் தாங்கள் அடைக்கலம் புகுந்திருக்ககூடிய மருத்துவநிலையங்கள் பாடசாலைகளை தவிர்த்துவிட்டு அங்கிருந்து ஒடினார்கள்.

இஸ்ரேல் மருத்துவமனைகளையும் பாடசாலைகளையும் தாக்குவதால் பொதுமக்கள் தற்போது அங்கு தஞ்சமடைவதை தவிர்த்துள்ளனர்.

எனினும் ஹெலிக்கொப்டர் ஒன்று அப்பகுதிக்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்ததும் அங்கு காணப்பட்ட மக்கள் கடும் பீதியில் சிக்குண்டனர்.

எல்நெமர் அதிர்ச்சியால் மயக்கமடைந்த பெண் ஒருவரை இழுத்துக்கொண்டு அங்கு காணப்பட்ட வீடொன்றிற்குள் தஞ்சமடைந்தார்.

சந்தைக்கு அருகில் உள்ள தொடர்மாடியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் இந்த உக்கிர தாக்குதலை மேற்கொண்டது என்பது  பொதுமக்களிற்கு உடனடியாக தெரியாது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக 270 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் ,600 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரபாவிலிருந்து வரும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் போல தங்களை காண்பித்தவாறு வீட்டுத்தளபாடங்கள் ஏற்றப்பட்ட டிரக்கில்நுஸ்ரெய்ட்டின் மத்திய பகுதிக்கு  வந்த இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலின் செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

காரிலும் டிரக்கிலும் இஸ்ரேலிய படையினர் வந்துசேர்வதை தனது உறவினர் ஒருவர் பார்த்தார் என  தெரிவிக்கின்றார் ராத் தவ்பிக் அபு யூசுவ்.அவர் தற்போது இந்த தாக்குதலின் போது காயமடைந்த மகனை மருத்துவமனையில் பாராமரித்து வருகின்றார்.

சிலர் டிரக்கிலிருந்து இறங்கினார்கள்  வீட்டிற்கு முன்னாலிருந்தவர்களிற்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்று அனைவரையும் கொலை செய்ய தொடங்கினார்கள்  என அவர் தெரிவிக்கின்றார்.

 

இதன் பின்னரே குண்டுவீச்சு ஆரம்பமானது. தனது படையினர் தாக்கப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.100 பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது தெரியாது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply