“தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி தனது அப்பா ரஜினிகாந்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், “என் இதயத்துடிப்பே. நீங்கள்தான் என் எல்லாமே, லவ் யூ அப்பா” என்று அவர் பதிவிட்டுள்ளார்.