லக்னோ: வித்தியாசமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பான செய்திகள்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
பீகாரில் சில நாட்களுக்கு முன்பு திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே உள்ளது சத்ராபால் என்ற கிராமம். இங்கு சிக்கந்தர் என்பவருக்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.
ஆனால், சிக்கந்தரின் மனைவி திடீரென இறந்துவிட்டார்.. எனினும், மாமியார் வீட்டிலேயே சிக்கந்தர் தங்கியிருந்த நிலையில், மாமியாருடன் சிக்கந்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவே நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியிருக்கிறது. இவர்களின் நடத்தையில், உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்ததால், நேரடியாகவே கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்கள்.
திருமணம்: இருவருமே தங்களுக்குள் உறவு உள்ளதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்கள். உடனே, உறவினர்கள் அனைவரும், ஊர் பஞ்சாயத்தை கூட்டி, ஊர் பெரியவர்கள் முன்னிலையிலேயே இவர்களுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள்.
கிராமத்தினர் முன்னிலையில், மருமகன், மாமியாருக்கு தாலி கட்டினார்.. இதில் ஹைலைட் என்னவென்றால், ஊர்க்காரர்கள் தங்களை ஒன்றுசேராமல் பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, மாமியாரும், மருமகனும், ஏற்கனவே நீதிமன்றத்திலும் பதிவு திருமணம் செய்து வைத்திருந்தார்கள்..
இந்த கல்யாண வீடியோதான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது..
அவமானம்: ஒருசிலர் இப்படி வெளிப்படையாகவே உண்மையை சொல்லி திருமணம் செய்கிறார்கள் என்றாலும், சிலர் வீட்டை விட்டு ஓடிப்போய் குடும்பத்துக்கு தீராத அவமானத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள்.
ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் “புதுமாதிரியான” சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கஸ்கஞ்ச் என்ற கிராமத்தில், இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி திருமணம் நடந்தது..
இரு வீட்டு பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் இதுவாகும்.. மணமக்களின் முழு சம்மதத்தின் பேரிலேயே இந்த திருமணம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.
ஆனால், ஜூன் 3ம் தேதி, மணப்பெண்ணின் அம்மாவும், மாப்பிள்ளையின் அப்பாவும், வீட்டை விட்டே ஓடிவிட்டார்கள்.
அதிர்ச்சி: இதனால் இரு குடும்பத்தினருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.. இதற்கு என்ன காரணம் என்று ஆளுக்கொருபக்கம் ஆராய்ந்தார்கள்.. இவர்களை குறித்து விசாரித்தார்கள்.
அப்போதுதான், இவர்கள் 2 பேருமே, கடந்த 28 வருடங்களுக்கு முன்பே காதலர்களாக இருந்து வந்தவர்களாம்..
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி, இறுதியில் காதலில் வந்து முடிந்துள்ளது இவர்களின் நட்பு. சந்தர்ப்ப சூழலால், இவர்களால் திருமணம் செய்ய முடியவில்லை..
ஆனால் என்றாவது ஒருநாள், இருவரும் ஒன்றுசேர்வது என்று முடிவெடுத்தார்கள்.. இதற்காக வருடக்கணக்கில் காத்திருக்க துவங்கினார்கள்..
கடைசியில் இருவரும் சம்பதிகளாக மாற முடிவு செய்துள்ளனர்.. இதற்காகவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்..
அதன்படியே திருமணத்தையும் நடத்தி வைத்துவிட்டு, தற்போது “எஸ்கேப்” ஆகியிருக்கிறார்கள்.
மணப்பெண் அம்மா: இதில் ஹைலைட் என்னவென்றால், ஓடிப்போன மணப்பெண்ணின் அம்மாவுக்கு 35 வயது தான் ஆகிறதாம்.. அப்படியானால், கல்யாணப்பெண்ணின் வயது????
அதைவிட முக்கியமான விஷயம், ஓடிப்போன மணமகனின் அப்பாவுக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்களாம்.. ஓடிப்போன மணப்பெண்ணின் அம்மாவுக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்களாம்..
மொத்த பேரும் இப்போது கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. கடந்த 17ம் தேதி திருமணமான புதுமணத்தம்பதியினர், இப்போது ஓடிப்போன “புதுஜோடியை” தேடி கொண்டிருக்கிறதாம்…!