காகங்கள் இடைவிடாமல் கரைந்ததால் எரிச்சலடைந்த கறிக்கடைக்காரர் ஒரு காகத்தை பிடித்து கட்டிப்போட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கறிக்கடைக்காரர் ஒருவர் காகத்தை பிடித்து கட்டிப்போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாடிபாகா பகுதியில் உள்ள தினசரி சந்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கோழி கறிக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், காகங்கள் இடைவிடாமல் கரைந்ததால் எரிச்சலடைந்துள்ளார்.

இதனால் காகங்களை அச்சுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார். கட்டப்பட்ட காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில் கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின.

இந்த சத்தத்தை தாங்க முடியாமல், அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள், சந்தைக்கு வந்தவர்கள் கோழி கறிக்கடைக்காரரிடம் காகத்தை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் அவர் காகத்தின் காலில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கறிக்கடைக்காரரின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்..

 

Share.
Leave A Reply