கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகரின் வீடொன்றிற்கு பணிப்பெண்ணாக வந்த ஒருவர், 20 நிமிடங்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருடப்பட்ட தங்கப் பொருட்களில் சங்கிலி, மோதிரங்கள், காதணிகள், வளையல்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர், பணிப்பெண் தேவை என, தமிழ் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார் தொழிலதிபரின் தொலைபேசி எண்ணுடன் வெளியான விளம்பரத்திற்கமைய, குறித்த பெண், வர்த்தகரின் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, கடந்த 15ஆம் திகதி கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த பெண்,தாம் களுத்துறையை சேர்ந்தவர் எனவும், மாதச் சம்பளம் எவ்வளவு எனவும் வயோதிபரிடம் வினவியுள்ளார்.

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர் வீட்டில் நடந்த சம்பவம் – பெண்ணொருவரின் அதிர்ச்சிகர செயல் | Tamil Women Stolen Gold Jewellery In Colomboஅதற்கமைய சில மணி நேரங்களில் புறக்கோட்டைக்கு தாம் வந்து விட்டதாகவும், பணியாற்றுவதற்காக வீட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதன்படி,சில நிமிடங்களில் அந்த பெண் முச்சக்கரவண்டியில், வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது, முச்சக்கரவண்டிக்காக வர்த்தகரிடம் இருந்து, 150 ரூபாயை பெற்றுள்ளார். அத்துடன் சாப்பிடாததால் பசியாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்கமைய,வீட்டில் இருந்த வயோதிப பெண் தேனீர் தயாரித்துவிட்டு, பார்த்தபோது,வீட்டிற்கு வந்த பணிப்பெண்ணைக் காணவில்லை.

இதனையடுத்து மூன்று மாடி வீட்டில், முழுமையாக தேடியபோதும், அவரை காணாததால், அறைக்குச் சென்று பார்த்த போது நகை பொதி காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த சீலாவதி என்ற பெண், இருபது நிமிடங்களில் தனது அறையின் மேசையில் இருந்த தங்கப் பொருட்கள் திருடி சென்றுள்ளதாக, வர்த்தகர் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Share.
Leave A Reply