யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் கொங்கே பாலத்திற்கு அருகில் திருக்கோணமலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பேருந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 51 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.