ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவர் சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த திருமணத்திற்கு பல மில்லியன் கணக்கில் செலவழித்துள்ளார்.

முக்கியமாக திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாப்பட்ட ஆனந்த் அம்பானியின் திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணைய தளங்களில் அதிகம் பரவி வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படி திருமணத்திற்கு மில்லியன் கணக்கில் செலவழித்த முகேஷ் அம்பானி, அவரது ஆரம்பரமான வீடான ஆண்டிலியாவிற்கு எவ்வளவு கரண்ட் பில் கட்டுகிறார் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது கும்பத்தினருடன் மும்பையில் உள்ள ஆண்டிலியா என்னும் ஆரம்பரமான வீட்டில் தான் வசித்து வருகிறார்.

இந்த வீடு பார்ப்பதற்கே பிரமாண்டமாக ஒரு பெரிய மாளிகை போன்று இருக்கும். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், 9 பெரிய லிப்ட்கள், நீச்சல் குளம், 3 ஹெலிபேடுகள், 160 கார்கள் நிறுத்தும் அளவில் பெரிய இடம் உள்ளன.

இவ்வளவு பெரிய வீடு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.

4 லட்சம் பரப்பளவைக் கொண்ட இந்த வீடு கட்டுவதற்கு சுமார் ரூ.15,000 கோடி செலவானது. இந்த வீட்டின் ஆடம்பரமான தோற்றம், வசதிகள், மற்றும் வடிவமைப்பு காரணமாக அரண்மனை போன்று அனைவராலும் வர்ணிக்கப்படுகிறது.

முக்கியமாக இவ்வளவு பெரிய வீட்டில் சுமார் 600-க்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர்.

அதோடு இந்த வீட்டில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் தாராளமாக சம்பளத்தைப் பெறுவதாக கூறுப்படுகிறது.

சில அறிக்கைகளின் படி, இங்கு பணிபுரிபவர்கள் மாதத்திற்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இது தவிர, மற்ற வசதிகளையும் அனுபவிக்கிறார்களாம்.

ஆண்டிலியா கட்டிடமானது மிகவும் அகலமானது மற்றும் உயரமானதும் கூட. எனவே இதற்கு உயர் அழுத்த மின் இணைப்பு தேவைப்படும்.

அதுவும் இந்த வீட்டிற்கு செலவாகும் மின்சாரத்தின் அளவானது மும்பையில் உள்ள 7,000 நடுத்தர மக்களின் குடும்பங்களுக்கு செலவாகும் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

யூனிட் அடிப்படையில் கூற வேண்டுமானால், மாதாந்திர நுகர்வு தோராயமாக 6,37,240 யூனிட்டுகள் இருக்கும். இதன் விளைவாக கரண்ட் பில் மட்டும் ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு ஆரம்பரமான அரண்மனை போன்ற வீட்டு கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, முகேஷ் அம்பானியிடம் உள்ள அபரிமிதமான செல்வத்தையும் வெளிக்காட்டுகிறது என்றே கூற வேண்டும்.

 

Share.
Leave A Reply