லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், 6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 2-வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குப் பயணிக்கலாம் அல்லது அந்த நாடுகளுக்குப் பயணித்து, அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம்.

ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து லக்செம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 3-வது இடத்தில் உள்ளன.

இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 191 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.இந்தப் பட்டியலில், இந்தியா 82-வது இடத்தில் உள்ளது.

செனகல் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் 82வது இடத்தை இந்தியாவுடன் பகிர்ந்துள்ளன.இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.”,

 

Share.
Leave A Reply