மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி கிராமத்தில் மலைப்பாம்பு ஒரு இளைஞரை விழுங்க முற்பட்டுள்ளது. கிராம மக்கள் மலைப்பாம்பை கொன்று இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி கிராமத்தில் மலைப்பாம்பு ஒரு இளைஞரை விழுங்க முற்பட்டுள்ளது. கிராம மக்கள் மலைப்பாம்பை கொன்று இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

மண்டலா மாவட்டத்தில் இருந்து கல்யாண்பூருக்கு திருமண ஊர்வலம் ஒன்று வந்துள்ளது. இந்த ஊர்வலத்தில் ராம் சஹாய் என்ற இளைஞர் வந்துள்ளார்.

இவர் அப்பகுதி ஒன்றில் காலைக் கடனை கழிப்பதற்கு சென்றுள்ளார். அவர் ஒதுங்கிய புதரில் 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருந்ததை அவர் கவனிக்கவில்லை.

இந்நிலையில், மலைப்பாம்பு மெதுவாக அவரை விழுங்க முற்பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட ராம் சஹய் மலைப்பாம்பின் வாயை திறந்தபடி பிடித்துக்கொண்டு தன்னை விடுவிக்க முயன்று இருக்கிறார்.

ஆனால் பாம்பானது அதன் இறுக்கத்தை விடாமல் தொடர்ந்து அவரது கழுத்தை இறுக்க ஆரம்பித்து இருக்கிறது.

இந்நிலையில் அவரால் மலைப்பாம்புவிடமிருந்து விடுபட முடியாத நிலையில் உதவி கேட்டு கத்தியுள்ளார்.

அவரின் குரல் கேட்ட அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடிவந்து அவரை மலைப்பாம்பிடமிருந்து விடுவிக்க முயன்றுள்ளனர்.

இருப்பினும் பாம்பு அவரின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் ராம்சஹய்க்கு மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது.

ராம்சஹயின் நிலமையை தெரிந்துக்கொண்ட கிராம மக்கள் கோடாரி, கம்பி போன்ற ஆயுதத்தால் பாம்பை தாக்கியுள்ளனர். இதில் பாம்பு இறந்ததும் ராம் சஹய் காப்பாற்றப்பட்டார்.

இச்செய்தி வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவருகையில், ராம் சஹாய் உயிரை காப்பாற்ற வேண்டியே பாம்பை அவர்கள் கொல்லும்படி ஆனது ஆகவே இது தவறில்லை என்றவர்கள் பஞ்சநாமம் நடத்தி மலைப்பாம்பை கிராமத்திற்கு வெளியே தகனம் செய்தனர். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply