பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியப் பெண் 5 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் ஐவரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.

காயங்களுடன் தனது உடையை தலைகீழாக அணிந்து அலங்கோலமாக அந்த பெண் உணவகத்தில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பற்றும்படி மன்றாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூலை 19 இரவு அந்த ஆஸ்திரேலிய பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மவுலின் ரோஜ் [Moulin Rouge] பகுதியில் உள்ள பார்கள் மற்றும் கிளப்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார்.

அங்கு வைத்து அவர்கள் ஐவரும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் ஒருந்த கபாப் உணவகத்தில் தஞ்சமடைந்த அந்த பெண் தனது நிலைமையை அங்கிருந்த ஊழியர்களிடம் எடுத்துக்கூற முயன்றார்.

ஆனால் அப்பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.நிலவரத்தை அறிந்து கடை ஊழியர் அவனை நெருங்குவதற்கு முன் அவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த பெண் இன்னும் குழப்ப நிலையிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அந்த ஐவரும் ஆபிரகிரர்களைப் போல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “,

Share.
Leave A Reply