– ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனது போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் கணக்கில் இன்றையதினம் (25) இது தொடர்பில் அறிவித்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியில் அன்னப்பறவை சின்னத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் (40.15%) பெற்று இரண்டாமிடத்தை பெற்று தோல்வியைத் தழுவியிருந்தார். அத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (6,015,934 வாக்குகள் 57.88%) வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிடும் தமது முடிவு தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்கவுள்ளதை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

எம்மை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற திறனற்ற அரசியல் குழுவால் 76 ஆண்டுகளாக நாம் வழிநடத்தப்பட்டோம்.

இலங்கை வளர்ச்சியடைய வேண்டுமானால், ஊழலை ஒழிக்க வேண்டும்

எமது வருமானத்தை அதிகரிக்க நாம் எமது இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பாகும்.

இலங்கையை முன்னேற்றுவதற்கு என்னுடன் இணையுமாறு ஒவ்வொரு இலங்கையருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

Share.
Leave A Reply