– வேட்புமனு ஏற்பு: ஓகஸ்ட் 15 (வியாழக்கிழமை)
– வேட்புமனு தாக்கல்: தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில்

இவ்வருடம் இடம்பெறுமென எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு இடம்பெறும் திகதியாக செப்டெம்பர் 21, சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, விஜயதாச ராஜபக்‌ஷ, சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர, பிரதான கட்சிகளான தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அநுர குமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்கத்கது.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தங்களது வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply