ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது..

இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் பேருந்து சேவை இல்லாததால் தனது மாமியார் வீட்டிலுள்ள மனைவியை காணும் ஆவலில் அரசுப் பேருந்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாரி டிரைவர்: ஆந்திர பிரதேசத்திலுள்ள நந்தியால் மாவட்டம் வேங்கடபூர் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையா… இவர் ஒரு லாரி ஓட்டுனர்.. இவருக்கும், இவரது மனைவிக்கும் சமீப காலமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

அடிக்கடி தகராறும், சண்டையுமாக இருந்து வந்த நிலையில், ஒருக்கட்டத்தில் வெறுப்படைந்தார் மனைவி.. பிறகு, கணவரிடம் கோபித்து கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இவரது அம்மா முச்சுமர்ரி பகுதியில் வசித்து வருகிறார்.. லாரி டிரைவரிடம் கோபித்து கொண்டுவந்துவிட்டதால், அம்மாவும், தன் மகளை புண்படுத்தாமல் தன்னுடனேயே தங்கவைத்துள்ளார்.

துர்க்கையா: இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, மனைவியை காண வேண்டும் என்று துர்க்கையா முடிவு செய்தார்..

ஆனால், நள்ளிரவு நேரம்தான் இப்படியொரு ஐடியா துர்க்கையாவுக்கு தோன்றியிருக்கிறது. அப்படியிருந்தும் நள்ளிரவிலேயே ஆத்மகுரு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது…

விடிகாலையில்தான் ஊருக்கு செல்ல பஸ் கிடைக்கும் என்பதால், உச்சக்கட்ட விரக்தியடைந்தார்.. எனினும் விடிய விடிய பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்தார் துர்க்கையா..

அதற்கு மேலும் பொறுமை இல்லாமல், அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு அரசுப்பேருந்தில் ஏறினார்…

அதில், டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அந்த பஸ்ஸை ஓட்ட துவங்கினார் துர்க்கையா.

அதிர்ச்சி: அதிகாலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த பணிமனை அதிகாரிகள், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்..

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, காணாமல் போன பஸ்ஸை தேட ஆரம்பித்தனர்.

அப்போதுதான், முச்சுமர்ரி பகுதியில் அரசு பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

உடனடியாக அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், பஸ்ஸை மீட்டதுடன், திருட்டுத்தனமாக பஸ்ஸை இயக்கிய லாரி ஓட்டுநர் துர்க்கையாவையும் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம்: அவரிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.. கோபித்து கொண்டு போன மனைவியை காண வேண்டும் என்பதால், திடீரென கிளம்பி செல்லும் சூழல் வந்துவிட்டதாம்..

ஆனால், தன்னிடம் செலவுக்கு பணம் இல்லாததால், மனைவியை காண வேறு வழியில்லாமலும் தான் அரசு பஸ்ஸை இயக்கியதாய் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் துர்க்கையா.

இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் கூறும் தகவல்கள் உண்மைதானா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை பார்ப்பதற்காக அரசு பஸ்சை பயணி ஒருவர் எடுத்து சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply