நகரிலுள்ள பூக்கடை ஒன்றுக்குச் சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டிக்கு பணத்தைச் செலுத்தி மலர்மாலை, உடைகள் உள்ளிட்டவற்றுடன் இறுதிச் சடங்குகளை முன்பதிவு செய்த பின்னர் மலர்ச்சாலையிலிருந்து சவப்பெட்டியை வேன் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் பலாங்கொடை பிரதேசத்தில் செய்தி பதிவாகியுள்ளது.

மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் வைத்தியர்களும் மற்றவர்களும் கூறியதாகவும் அவர்கள் அதை நம்பி இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் மலர்சாலை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தாய் இறக்கவில்லை எனவும் தாய் சமையல் அறையில் இருப்பதாகவும் பிள்ளைகள் கூறியுள்ளதுடன் மலர்ச்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை மீள எடுக்க முற்பட்டபோது குறித்த நபர் ஊழியர்களை அச்சுறுத்தியதால் மலர்ச்சாலை ஊழியர்கள் சவப்பெட்டியை வீட்டில் வைத்துவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மூத்த பிள்ளையும் மலர்ச்சாலை உரிமையாளரும் 119 என்ற அவசர இலக்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பலாங்கொடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வீட்டுக்குச் சென்று சவப்பெட்டியை மீண்டும் எடுத்துச் சென்று மலர்ச்சாலை ஊழியர்களிடம் கையளித்துள்ளனர்.

சவப்பெட்டிக்காக செலுத்திய 40,000 ரூபாவை மீளப் பெற்றுக் கொள்வதற்காக மலர்ச்சாலைக்கு வருமாறு மனைவிக்கும் கணவனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply