19 ஆம் நூற்றாண்டில் விபத்துக்குள்ளான கப்பலில் 100 ஷாம்பெயின் வைன் போத்தல்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதனை சுவீடன் கடற்கரையில் சுழியோடிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கப்பலை ஜூலை 11 ஆம் திகதி சோனார் (SONAR) கருவி ஊடாக கப்பலின் சிதைவைக் கண்டறிந்தபோது மீன்பிடி படகு என எண்ணியுள்ளார்கள்.

சுவீடன் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள பால்டிக் கடலில் பால்டிக்டெக் குழுவைச் சேர்ந்த போலந்து தொழில்நுட்ப சுழியோடிகள் குழுவினர் இந்த கப்பலை கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த கப்பலில் ஷாம்பெயின் வைன், தண்ணீர் போத்தல் மற்றும் பீங்கான் பொருட்கள் இருந்ததாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

களி மண்ணில் செய்யப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த செல்டர்ஸ் நாமம் 1850 மற்றும் 1867 க்கு இடையில் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாமம் தற்போதும் புழக்கத்தில் உள்ளது.

Share.
Leave A Reply