2001 செப்டெம்பர் 11 தாக்குதலை நடத்த சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூவரும் வழக்கு விசாரணைக்கு முந்திய இணக்கத்திற்கு வந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளமான குவான்தனாமோ பேயில் பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலித் ஷெய்க் முஹமது, வலீத் முஹமது சாலிஹ் முபாரக் பின் அத்தாஸ் மற்றும் முஸ்தபா அஹமது ஆதம் அல் ஹெளசாவி ஆகியோர் இவ்வாறு இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

இதன்படி இந்த மூவரும் மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையில் வழக்கு விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்ள இணங்கி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடன்பாடு குறித்து சந்தேக நபர்களின் குடும்பத்தாருக்குக் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரகை குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply