ஜெர்மனியில் பெரும் சோகம் தவிர்க்கப்பட்டது. ஒரு தந்தை தனது மூன்று வயது மகனை விபச்சாரியைப் பார்க்கச் சென்றபோது காரில் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
சிறுவன் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
திங்கள்கிழமை மாலை, நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹேகனில், (Hagen, en Rhénanie-du-Nord-Westphalie) அந்த வழியால் சென்ற ஒருவர் குழந்தை, ஒன்று வெயிலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் கார் இருக்கையில் வியர்த்து, அமர்ந்து இருப்பதையும், ஜன்னல்கள் லேசாகத் திறந்திருப்பதைக் கவனித்தார்.
அவரின் வேண்டுகோளின் பேரில், சிறுவன் கதவை உள்ளே இருந்து திறக்க முடிந்தது. வழிப்போக்கர்கள் குழந்தைக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்தனர்.
அவசரகால சேவை துறையினர் அழைக்கப்பட்டு, குழந்தை நீரிழப்பு மற்றும் அதிக உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தனர், மேலும் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தந்தை தனது வாகனத்திற்குத் திரும்பியதும், அவர் வெறுமனே நண்பருடன் “அரட்டை” செய்யச் சென்றதாகவும், தனது மகன் காரில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறி சம்பவத்தை குறைத்து காட்ட முயன்றார்.
இருப்பினும், விசாரணையில், அவர் உண்மையில் ஒரு விபச்சாரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார், வெளியில் வெப்பநிலை 26 டிகிரியை எட்டியதால் ஆபத்தான நிலையில் தனது குழந்தையைத் தனியாக விட்டுச்சென்றுள்ளார்.
உதவி மற்றும் கல்வி கடமையை மீறியதற்காகவும், அலட்சியமாக உடல் காயப்படுத்தியதற்காகவும் தந்தை மீது புகார் பதிவு செய்யப்பட்டது.