கதிர்காமம் தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவர் கதிர்காமம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (14) புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கதிர்காமம் ராஜா மாவத்தையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபரின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் 16 வயது சிறுமி, சந்தேக நபரை காதலித்து வந்ததையும், அவர் தெட்டகமுகந்த பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு தனது ஆடைகளை கழற்றி தன்னை அணைத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தான் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.

எனினும், மாணவி மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply