-அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
-‘ஸ்டேயிங் அலைவ்’ என்ற பாடலுக்கு டிரம்பும் அவரும் நடனம் ஆடும் வீடியோவை மஸ்க் பகிர்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.
இந்நிலையில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்டு டிரம்பும் நடனமாடுவது போன்ற AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்” என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
அண்மையில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Haters will say this is AI 🕺🕺 pic.twitter.com/vqWVxiYXeD
— Elon Musk (@elonmusk) August 14, 2024