“உலகின் அதிக எடையுள்ள மனிதராக இருந்த காலித் பின் மொஹ்சென் ஷாரி தனது எடையை பெருமளவில் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

610 கிலோ எடை வரை இருந்த அவர், தற்போது 542 கிலோ எடையை குறைத்து 63 கிலோ எடையுள்ள நபராக மாறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் உதவியால் ஷாரிக்கு எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான உடற்பயிற்சியால் அடுத்த 6 மாதங்களில் தனது எடையில் பாதியை அவர் குறைத்தார். அவரது மருத்துவக் குழு வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி ஆகியவை அவரது எடை குறைப்பிற்கு உதவிகரமாக அமைந்தது. அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாகி இருந்த அவர், இப்போது 63 கிலோவுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார். “,

Share.
Leave A Reply