திரைப்படத்தில் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.75 லட்சத்தை ஒரு நடிகர் சம்பளமாக வாங்கியுள்ளார். இது உலகில் எந்த ஒரு நடிகரும் வாங்காத அதிக சம்பளமாகும்.
மேட்ரிக்ஸ் 2 மற்றும் 3 திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கீது ரீவ்ஸ் (Keanu Reeves) சுமார் ரூ.450 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.
அவரது கதாபாத்திரமான நியோ இரண்டு படங்களிலும் சேர்த்து 638 வார்த்தைகள் பேசியிருக்கும். அதாவது இந்த நடிகர் தான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.75 லட்சத்தை சம்பளமாக வாங்கியுள்ளார்.
2000 களில் உயர்ந்த நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்த கீனு ரீவ்ஸ் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய நடிகராக இருக்கிறார். முதல் மேட்ரிக்ஸ் படத்திலேயே அவர் ரூ.500 கோடியை சம்பளமாக வாங்கினார்.
ஜான் விக் (John Wick) படங்களின் வெற்றிக்குப் பிறகு கீனு ரீவ்ஸ் தற்போது அதிக சம்பளம் வாங்குகிறார். அதாவது ஜான் விக் 4ஆம் பாகத்துக்கு பல நூறு கோடிகளை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ் போன்றவர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் தொகையை விட கீனு ரீவ்ஸ் வாங்கும் தொகை மிக மிக அதிகம்.
கீனு ரீவ்ஸ் நடித்த படங்களிலேயே மிகவும் குறைவாக வசூலித்த படம் என்றால் அது தி மேட்ரிக்ஸ்: ரீசர்ஷன்ஸ் தான். (The Matrix Resurrections) கோவிட் மற்றும் மோசமான விமர்சனங்களால் இந்த படம் தோல்வி அடைந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,200 கோடியை வசூலித்தது.
இவ்வளவு பணத்தை வசூலித்து தனக்கு தானே வைத்துக் கொள்ளாத கீனு ரீவ்ஸ், உலகில் அதிகளவு நன்கொடை செய்யும் நடிகராகவும் இருக்கிறார்.
ஆண்டுதோறும் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கி வரும் இவர், பெரிய மாளிகை மற்றும் பிரமாண்ட கார்களுக்குப் பதிலாக மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்கிறார்.