“மேத்யூ பெர்ரிஅமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான பிரண்ஸ் [FRIENDS] தொடரில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மேத்யூ பெர்ரி (Matthew Perry) சாண்ட்லர்[Chandler] கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

54 வயதான மேத்யூ கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது ரத்தத்தில் கேட்டமைன் [ketamine] எனப்படும் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது பின்னர் நடந்த பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

கேட்டமைன் என்றால் என்ன?

மனநலம் சார்ந்த பிரசனைகளுக்கு கேட்டமைன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

மனஉளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ அதை குணப்படுதவுவதற்காக கேட்டமைன் உட்கொளள்ளத் தொடங்கியுள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கேட்டமைனுக்கு அடிமையாகி உள்ளார்.

சூழ்ச்சியில் சிக்கிய மேத்யூ

இதனைப் பயன்படுத்தி இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து மேத்யூவின் உதவியாளர் அவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் கேட்டமைன் போதைப் பொருளைத் தொடர்ந்து வழங்கி பணம் பறித்து வந்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேத்யூவின் உதவியாளர், அந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.

கேட்டமைன் ராணி

இவர்களுள் முக்கியமானவர் லாஸ் ஏஞ்சல்சின் கேட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா [41 வயது] .

ஹாலிவுட் பிரபலங்களும் பணக்காரர்களும் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஜாஸ்வீன் சங்கா

போதைப்பொருட்களை சப்பளை செய்து வந்துள்ளார்.

போதை சாம்ராஜ்யம்

மேத்யூவுக்கு அதிக கேட்டமைன் டோஸ்களை ஜாஸ்வீன் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சங்காவின் குடியிருப்பில் 79 பாட்டில்களில் திரவ கேட்டமின்கள், 2000 மெத் மாத்திரைகள், கோகைன்கள் ஆகியவை பிடிபட்டுள்ளன.எரிக் பிளெமிங் என்ற இடைத்தரகர் மூலம் மேத்யூவுக்கு சங்கா கேட்டமின்களை விற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

ஒரு குப்பி கேட்டமின் 12 டாலர்கள் என்று இருந்த நிலையில் மெத்தியூவிடன் ஒரு குப்பி கேட்டமினை 1000 டாலர்கள் வரை இந்த கும்பல் ஏமாற்றி விற்றுள்ளது. “,

Share.
Leave A Reply