“சென்னை,இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் உலகளவில் வெளியாகி்யுள்ளது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆக. 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.18 ஆம் நூற்றாண்டு கால செட் அமைப்புகள், சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பிரமிப்பைத் தருகின்றன.
An Epic vision of bringing the truths of our ancient roots to the world to witness, brought to life by the tireless efforts of hundreds of artists and technicians. #Thangalaan is the culmination of passion, dedication, and immense hard work ✊🏾 This one is for our people 🤎
K.E.… pic.twitter.com/zB6BYPGAEn
— Neelam Productions (@officialneelam) August 18, 2024
ஓ!! இது தான் அந்த காவியப்படமா? pic.twitter.com/kvx3yqNQlS
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) August 18, 2024