யாழ்ப்பாணம் வந்துள்ள சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, அனுராத ஜகம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று மதியம் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.