மாமியாரை தாக்கி கொலை செய்து மனைவி மற்றும் மகளை கடுமையாக தாக்கி காயப்படுத்திய நபரொருவர் கலபிடமட லெவன்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலபிடமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவன்கம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) சந்தேக நபர், மாமியாரை தாக்கி கொலை செய்துள்ளதோடு, மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பணத் தகராறு காரணமாக மாமியாரின் தலையில் கல்லால் தாக்கியுள்ளார். இதன்போது, தலையில் பலத்த காயமடைந்த மாமியார் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதலவத்த, லெவன்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலபிடமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply