அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் எனவும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்றும் கூறப்படுகிறது.
தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.