இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தனுஜ் சாஹர் என்பவர் 2 வயது குழந்தையை கடத்திச் சென்றார்.

பல மாத தேடலுக்கு பிறகு அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிஸார் குழந்தையை மீட்கச் சென்றனர்.

இதையறிந்த தனுஜ் சாஹர் குழந்தையை தூக்கிக்கொண்டு வயல்வெளி வழியாக தப்பிச் சென்றார்.


அவரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற பொலிஸார் சந்தேக நபரை பிடித்து குழந்தையை மீட்டனர்.

அப்போது, தனுஜை பிரிய மனமில்லாமல் அந்த குழந்தை கதறி அழுதது. இதுகுறித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply