கொழும்பு விமானநிலையத்தின் விசா வழங்கும் நடைமுறையின் தற்போதைய நிலைமை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ள சுற்றுலாப்பயணியொருவர் அது தொடர்பில் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.
முழுமையான பேரழிவு இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இது குறித்து எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை இணையத்தில் எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கடவுச்சீட்டை எடுத்து முன்னாள் உள்ள குவியலில் வீசும் ஒரு மனிதருடன் சிறிய கருமபீடத்தின் முன்னால் நாங்கள் வரிசகையில் நிற்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நீங்கள் வரிசையின் பின்புறத்திற்குச் சென்று இரண்டாவது சிறிய கருமபீடத்தின் பின்னால் ஒரு பெண் தோராயமாக குவியலிலிருந்து கடவுச்சீட்டினை எடுத்து உங்கள் பெயரைப் படிக்க அல்லது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தைக் காட்ட முயற்சிக்கும் வரை மீண்டும் காத்திருக்க வேண்டும்.
மீண்டும் சுமார் இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு நீங்கள் அங்குள்ளவர்களை தள்ளிக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் முன்னால் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும்.
நீங்கள் கருமபீடத்திற்கு சென்றவுடன் உங்களை 50 டொலர்களை செலுத்துமாறு கேட்பார்கள் மேலும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் பணத்தை செலுத்துவதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் உங்களுக்குதெரிவிப்பார்கள் . உங்களிடம் பணம் இல்லையென்றால் நீங்கள் கருமபீடத்திலிருந்து விட்டு வெளியேறி ஏடிஎம் ஒன்றைக் கண்டுபிடித்து மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும்.
குளிரூட்டிகள் இல்லை எனவே மிகவும் சூடாக இருக்கிறது.
இது ஒரு முழுமையான பேரழிவு எங்கள் விசாவைப் பெற நாங்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.என அவர் தெரிவித்துள்ளார்.