மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சார்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ’காலம் மாறிப்போச்சு’ என்ற படத்தினை மலையாளத்தில் ரீமேக் செய்து, நான் அந்த படத்தில் நடித்திருந்தேன்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஆரம்பத்தில் தான் கேட்பார்கள், ஆனால் அந்த படத்தில் மட்டும் ஷூட் முடியும் போது தான் அந்த விஷயம் நடந்தது.

கடைசி மூன்று நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் ஷூட் நடந்தபோது கடைசி நாள் முடித்துவிட்டு கிளம்பும் போது இயக்குநரிடம் கிளம்புகிறேன் என்று சொன்னேன்.

பின் ப்ரொடக்ஷன் மேனேஜரிடம் சென்று கிளம்புவதாக சொன்னபோது தயாரிப்பாளர் ரூமில் இருக்கிறார், அங்கு சென்று சொல்லுங்கள் என்றார்.

என் அசிஸ்டெண்டுகளுடன் சென்றபோது என் அக்காவும் இருந்தார். உடனே மேனேஜர் எதற்காக அசிஸ்டெண்ட்ஸ் என்றதும் அவர்கள் செல்வதில் என்ன பிரச்சனை என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர் ரூமிற்கு சென்றேன். அவருடன் 8 பேர் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சென்றவுடன் ரூமை தாழிட்டு என் அக்கா மீது பாய்ந்து புடவையை உருவினார்கள். என்னிடமும் ஒருவர் வந்தார். நான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்துவிட்டேன். என் அசிஸ்டெண்ட்களில் ஒருவரான லட்சுமணன் அவர்களை அடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் எம்.பி ஒருவரிடம் எனது உறவினர் வேலை செய்திருந்தார், அவருக்கு விஷயத்தை கூறி பொலிஸார் ஹோட்டலுக்கு வந்துவிட்டதாக நடிகை சார்மிளா உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

Share.
Leave A Reply