ரஷ்யாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் கீழ் தளத்தில் வாழ்ந்து வந்த 17 கிலோ எடையுடைய பூனை ஒன்று விலங்குகள் நல ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பூனையை கண்டுபிடிக்கும் போது அது அதிக உடல் எடை காரணமாக நடக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான துரித உணவுகளை விரும்பி உண்ணுவதால் இந்த பூனைக்கு “கொரோஷிக்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பூனையின் காணொளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

தற்போது, உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் இந்த பூனையின் உடல் எடையை குறைப்பதற்கு அந்நாட்டு கால்நடை வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த பூனையின் முன்னைய பராமரிப்பாளர் பூனையின் மீது கொண்ட அதீத அன்பினால் அதற்கு அதிகளவான உணவுகளை கொடுத்திருப்பதாகவும் இது மிகவும் பாரதூரமான ஒரு விடயம் எனவும் அந்நாட்டு கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply