அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலகி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், என்பவற்றில் பார்க்க விரும்புகிறேன்.
சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கிறது.
எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.