அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மைதானத்தை ஒட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.

இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டொனால்டு டிரம்ப்-ஐ குறிவைத்துதான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் 2-வது முறையாக வெளிப்படையாக டொனால்டு டிரம்ப்-ஐ கொல்ல முயற்சி நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் எலாக் மஸ்க்கிடம் ஒருவர் “ஏன் அவர்கள் டொனால்டு டிரம்ப்-ஐ கொலை செய்ய விரும்புகிறார்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எலான் மஸ்க் “மேலும், ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸை படுகொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை” எனக் பதில் கூறியுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் உள்ளார். நான் வெற்றி பெற்றால் எலாஸ் மஸ்க்கிற்கு மந்திரிசபையில் இடம் அளிப்பேன் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply