கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்தவருடம் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை இறுக்கமாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் உள்ள தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

இந்த வருடம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையிலேயே புதிய அறிவிப்பினை கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பெருமளவானவர்கள் குடியேறுவது நாட்டின் வீட்டு வசதிகள் தொழிற்சந்தை சமூக சேவைகளிற்க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவிற்கு வருவது ஒருவரப்பிரசாதம் அது ஒரு உரிமையில்லை என கனடாவின் குடிவரவு துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாணவர்களிற்கு அனுமதி வழங்கினோம் 2025 இல் அதனை 437,000 ஆகக்குறைக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply