நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் 90-களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை ரம்பாவுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக ரம்பா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்ற நடிகை ரம்பா யாழ்பாணம் கடற்கரையில், தனது கணவர், மகள்கள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், ரம்பாவுடன் அவருடைய மகள் லான்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படத்தில், நடிகை ரம்பாவின் மகள் லான்யா ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார்.

 

Share.
Leave A Reply