புறா எல்லாம் விலங்குகளை வேட்டையாடுமா? என்ற கேட்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் ஒரு நிமிடம் அவர்களுக்கு நெஞ்சே வெடித்துவிடும். ஏனென்றால், இந்த வீடியோவில் இருக்கும் புறா முயலையே வேட்டையாடி உயிரோடு முழுங்கியிருக்கிறது.
சில விஷயங்களை கேட்பவர்களுக்கு விநோதமாக தோன்றலாம், ஆனால் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கே விநோதமாக இருக்கும். ஆம், கடற்புறா ஒன்று முயலை உயிரோடு வேட்டையாடி விழுங்குகிறது.
கூடவே இன்னும் இரண்டு கடற் புறாக்கள் இருக்கின்றன. கடலில் பொதுவாக மீன்களை வேட்டையாடி வாழும் கடற்புறா இப்போது நிலத்திலும் வேட்டையாட தொடங்கிவிட்டது. கடலின் மேற்பரப்பில் நீந்தி விளையாடி மீன்களை வேட்டையாடி பிடிப்பதில் கடல்புறாக்களுக்கு கை வந்த கலை.
அப்போது, கடல் சுறாக்கள் மற்றும் முதலைகளுக்கும் இவை இரையாகும் நிகழ்வும் நடக்கும். ஆனால், கடல் புறா முயலை வேட்டையாடுவது என்பது பலரும் கேள்விப்பட்டிராத செய்தி.
வீடியோவாக இந்த காட்சி பதிவு செய்யப்படவில்லை என்றால் பலரும் கடல்புறா முயலை வேட்டையாடும் என வாய்வார்த்தையாக சொன்னால் அதனை நம்பியிருக்க மாட்டார்கள்.
ஏன், இந்த வீடியோவை எடுத்தவராலேயே நம்ப முடியவில்லை. வியப்பின் உச்சத்தில் இருந்தபடியே தான் கடல் புறாவின் வேட்டை வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
நேச்சர் இஸ் ப்ரூட்டல் என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ பார்த்த பலராலும் புறாவின் இந்த வேட்டையை நம்ப முடியவில்லை.
வீட்டருகே அல்லது கோயிலுக்கு செல்லும்போது அங்கு பறக்கும் புறாக்களையே அதிசயமாக பார்த்து பழகியவர்களுக்கு இந்த கடல் புறாவின் வீடியோ அதிர்ச்சியாக இருந்தாலும் வியப்பதற்கில்லை.
Seagull swallows a whole rabbit. pic.twitter.com/aC9RvX6Jwg
— NATURE IS BRUTAL (@TheBrutalNature) October 5, 2024
இந்த வைரல் வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ எல்லோருமே எங்களால் இந்த காட்சியை நம்பவே முடியவில்லை என்றே கூறியிருக்கிறார்கள். புறா வேட்டையாடுமா? என்று ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
ஒருசிலர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் இவை என்ற சுற்றுச்சூழல் மாற்றத்தின் விளைவுகளை ஒரு கவலையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்னும் சிலர் இதை குறித்து உலக நாடுகள் கவனத்தில் கொண்டு காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என அறிந்து, உயிரினங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.